சாட்சி விசாரணைக்கு உத்தரவிட முடியாது… கோடநாடு வழக்கில் அதிரடி உத்தரவு!

கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக சயான், மனோஜ் உள்ளிட்டோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு, நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

(NEXT) இந்த வழக்கில் பல சாட்சிகளிடம் விசாரணை நடைபெறவில்லை எனக் கூறி சயான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீலகிரி நீதிமன்றம், கூடுதல் விசாரணை நடத்த போலீசாருக்கு அனுமதி அளித்தது.

இந்நிலையில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, நீலகிரி நீதிமன்றத்தில் சாட்சி விசாரணையை தொடங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவானது நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், மேல் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், சாட்சி விசாரணையை தொடங்கினால் வழக்கின் போக்கு மாறிவிடும் என்றும், சாட்சி விசாரணையை தொடங்க அனுமதிக்கக் கூடாது எனவும் சிறப்பு அரசு வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, வழக்கில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா,
இளவரசி ஆகியோரையும் சாட்சிகளாக சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளதால், அவர்கள் பதில் மனு தாக்கல் செய்ய அனுமதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் மேல் விசாரணை நடைபெற்று வருவதால், சாட்சி விசாரணையை நடத்த உத்தரவிட முடியாது எனக் கூறி, மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….