இந்த மருத்துவர்களுக்கு உரிமையில்லை… உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நகரங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் பணியாற்றும் மருத்துவர்கள், மேற்படிப்பில் சேர கிராமப்புறங்களில் பணியாற்றுபவர்களுக்கான ஊக்க மதிப்பெண் பெற உரிமையில்லை என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிராமப்புறங்களில் பணியாற்றியவர்களுக்கான 5 சதவீத ஊக்க மதிப்பெண்கள் வழங்க வேண்டுமென்ற கோர்க்கையை மருத்துவ கல்வி இயக்குனரக தேர்வுக்குழு நிராகரித்ததை எதிர்த்து திருவாரூர் மாவட்டம், தண்டலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர் அருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு நீதிமன்றம், மருத்துவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்றுவதை ஊக்குவிக்கவே, மேற்படிப்புகளில் ஊக்க மதிப்பெண்கள் வழங்கப்படுகிறதே தவிர, நகரங்களுக்கு அருகில் உள்ள பகுதியில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு அல்ல எனத் தெரிவித்தது.

நகரங்களில் இருந்து வெகு தொலையில் அமைந்துள்ள கிராமப்புறங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு மட்டுமே ஊக்க மதிப்பெண் பெற உரிமை உள்ளது எனத் தெரிவித்த நீதிபதிகள், கிராமப்புறங்களில் பணியாற்றியவர்களுக்கான 5 சதவீத ஊக்க மதிப்பெண்கள் வழங்க வேண்டுமென்ற கோர்க்கையை மருத்துவ கல்வி இயக்குனரக தேர்வுக்குழு நிராகரித்ததை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…