வீட்டு வாசலில் வைத்து ஆசிரியைக்கு கத்திக்குத்து… தப்பிய மாணவனுக்கு வலைவீச்சு!

அரசு பள்ளி ஆசிரியை மாணவன் கத்தியால் குத்துவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருத்தாசலம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரேகா என்பவர் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிகிறார். இவர் மதிய உணவு சாப்பிட்டு விட்டு வீட்டில் இருந்து வெளியே வரும் போது மாணவர் ஒருவர் கத்தியால் வெட்டியதில் காயமடைந்தார்.
இதையடுத்து விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் ஆசிரியை ரேகா சிகிச்சை பெற்றார். மாணவர்
கத்தியால் வெட்டும் போது, கீழே குனிந்ததால் லேசான காயத்துடன் ஆசிரியை ரேகா உயிர் தப்பியுள்ளார்.
இதுகுறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த விருத்தாசலம் போலீசார், சிசிடிவி காட்சிகள் மூலம் மாணவரை தேடி வருகின்றனர்.