அறநிலையத்துறைக்கு சவால் விடும் பாஜக… அயோத்தியா மண்டப விவகாரத்தில் கொந்தளிப்பு!

அயோத்தியா மண்டபத்தை இந்து அறநிலையத்துறை கையகப்படுத்த முயன்றதற்கு தமிழக பாஜக மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளதோடு, நீதிமன்ற வழக்கை சந்திக்க தயார் என்றும் சவால் விட்டுள்ளார்.
அயோத்தியா மண்டபம் 62 ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை மேற்கு மாம்பல சாலையில் அமைக்கப்பட்டது. ஆன்மீக வழிகாட்டுதல்கள், பஜனைகள் மற்றும் நவராத்திரி போன்ற விழாக்கள் நடத்தப்படும் அயோத்யா மண்டபத்தில் பக்தர்கள் திரளாக எல்லா நாட்களிலும் அங்கே வருவது வழக்கம். அங்கே இருக்கும் நிர்வாக பிரச்சனைகளால் அங்கு இருக்கும் ஒரு சிலர் நிர்வாகத்தின் மீது குற்றம் சுமத்தி, அறநிலையத்துறைக்கு கடிதம் எழுதியதை தொடர்ந்து, நிர்வாகத்தை மேற்கொள்ள அறநிலையத்துறை வருகிறார்கள்.
இதனை தொடர்ந்து ஸ்ரீ ராம் சமாஜ் நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியது. இங்கு உண்டியல் எதுவும் இல்லை, அறநிலையத்துறை இங்கு எந்த கணக்கு பார்க்க வேண்டியதில்லை, இந்து மக்களுக்கான கோவிலோ விக்ரகங்கலோ இல்லை எனவும் மக்களுக்கு சேவை செய்கிற இடம் என்று ஸ்ரீ ராம் சமாஜ் நிர்வாகம் சார்பில் முறையிடப்பட்டது.
வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், 2014ம் ஆண்டு தனது தீர்ப்பில், இந்த வழக்கை பொறுத்தவரை சம்பந்தப்பட்ட மற்றும் தொடர்புடைய “ஆஃப்ரோபிரியேட் அத்தொரிட்டி” பேசி முடிவு செய்துகொள்ளுங்கள் என தீர்ப்பளித்து உத்தரவிட்டது.
2014 ஆம் ஆண்டு முதல் இன்று வரை ஸ்ரீ ராம் சமாஜ் நிர்வாகம் சார்பில் மறுபடியும் ஒரு குழு அமைக்காமல் அல்லது உயர்நீதிமன்றத்துக்கும் செல்லாமல் இருந்த காரணத்தினால், இதையே ஒரு காரணமாக வைத்து எட்டு ஆண்டுகள் கழித்து திடீரென நேற்று ஸ்ரீ ராம் சமாஜ் நிர்வாகத்தை நாங்கள் மேற்கொள்கிறோம் என அறநிலையத்துறையினர் வந்தனர். நிர்வாகத்தை மேற்கொள்ள வந்தவர்கள் கையில எந்த ஆதாரமும் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டார்கள். இதனிடையே நமது பாஜக தொண்டர்கள் அங்கு முற்றுகை போராட்டம் நடத்திக்கொண்டிருந்தோம்.
பிற்பகல் 2 மணி அளவில் மீண்டும் வந்த அறநிலையத்துறையினர், நேற்றைக்கு அதாவது 11ஆம் தேதி டைப் செய்து கையெழுத்துப் போடப்பட்ட கடிதத்தை மட்டும் காண்பித்துவிட்டு, நிர்வாகத்தை மேற்கொள்ள போகிறோம் என்று உள்ளே நுழைந்தனர். இந்நிலையில் அறநிலையத்துறை அதிகாரிகளை தொடர்ந்து உள்ளே செல்ல அனுமதிக்காத பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதே வேளையில் இவ்வழக்கை நீதிமன்றத்தில் மதியம் 12 மணிக்கு எடுக்கப்படும் பிறகு 2 மணிக்கு எடுக்கப்படும், 4 மணிக்கு எடுக்கப்படும் என மாறி மாறி கூறி கடைசியாக இன்று தான் வழக்கு எடுக்கப்பட்டது. வழக்கை எடுத்த நீதிபதி, பூஜைகள் மற்றும் பஜனைகள் மேற்கொள்ள எந்த தடையோ பிரச்சனையோ இல்லாத காரணத்தால், இந்த வழக்கு வரும் 21 ஆம் தேதி எடுக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டார்.
அறநிலையத்துறைக்கு இதுபோன்று ஆயிரக்கணக்கான பிரச்சனைகள் உள்ளது. பெரிய மற்றும் சின்ன இடம் என பல வழக்குகள் உள்ளது. அதை எல்லாம் விட்டு விட்டு திடீரென்று ஒரே நாளில் ஒரு கடிதத்தை கொடுத்து ஒரே நாளில் பொறுப்பு எடுத்துக் கொள்கிறோம் என்று சொல்வது வேடிக்கையான இந்து மக்கள் மனதை புண்படுத்தும் செயல். இந்து மக்கள் கூடி அவர்களுடைய பழக்க வழக்கங்கள் கலாச்சாரப்படி, பஜனைகள் நடத்தும் உண்டியல் இல்லாத இடத்தை, அறநிலையத்துறை கைப்பற்றி கணக்குகள் மற்றும் நிர்வாகத்தை மேற்கொள்ள துடிப்பது வேடிக்கையான செயல். இருப்பினும் இவ்வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் காரணத்தினால், நீதி வெல்லும் என நாம் எதிப்பார்ப்போம்.
இந்த விஷயத்தில் அராஜக போக்கில் கையான அறநிலையத்துறை மற்றும் காவல்துறையினருக்கும் என் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.