இனி 100 அல்ல 1000… தமிழ்நாடு அரசின் செயலை பாராட்டிய ஐகோர்ட்!

chennai high court

இ-சேவை முறையில் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது, அது நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங்களை 1000 எழுத்துகளில் தெரிவிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சேலத்தை சேர்ந்த சின்னப்பையன் என்பவர் இறந்தபிறகு வாரிசு சான்றிதழ் கோரி அரசின் இ-சேவை மூலம் அவரது தாயார் சின்னப்பிள்ளை என்பவர் அளித்த விண்ணப்பம் காரணங்களை தெளிவாக கூறாமல் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு தொடர்ந்தார்.

இதுதொடர்பான வழக்கு விசாரணையின் போது வருவாய் நிர்வாக துறை பிறப்பித்த சுற்றறிக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் இ-சேவை முறையில் வாரிசு சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும்போது, அது நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணங் 100 எழுத்துகளில் அளிக்கப்படும் என்றிருந்த கட்டுப்பாட்டை 1000 எழுத்துகள் என மாற்றிய உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி அனிதா சுமந்த் பாராட்டு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.