ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு… குற்றவாளியை விசாரிக்க அனுமதி கோரும் காவல்துறை!

iit madras iniated women safety campaign

சென்னை ஐஐடி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கிய குற்றவாளியிடம் விசாரணை நடத்த வேண்டும் என்பதால் அவரது முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

கிங்சோ தெப்சர்மாவுக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கோட்டூர்புரம் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனு நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்ப ராஜ், குற்றம் சாட்டப்பட்ட நபர் முன் ஜாமீன் நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை என்றும் மேலும் இந்த வழக்கில் வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழ் சில பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

அதனால் அவரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம் உள்ளதால், அவருடைய முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இதுகுறித்து கிங்சோ தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை 22ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….