70 வயது மூதாட்டியின் செல்போனுக்கு வந்த குறுச்செய்தி… அடுத்த நடந்த பயங்கரம்!

திருச்சி திருவெறும்பூர் பெல் நிறுவனத்தில் மருத்துவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஞானசுந்தரி, 70 வயதான இவர் திருச்சி என்.ஐ.டி பகுதியில் உள்ள ரெட்டியார் தோட்டம் அருகில் வசித்து வருகிறார், நேற்று முன்தினம் இவருடைய செல்போனில் இவருக்கு பான் கார்டு இணைப்பு தொடர்பாக ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
அதனை தொட்டவுடன் “எஸ்.பி.ஐ யோனா” என்ற செயலியின் பக்கத்திற்கு நுழைந்துள்ளது. ஞான சுந்தரி தொடர்ந்து செயலியில் கேட்கப்பட்ட எல்லாவற்றையும் பதிவு செய்துள்ளார் – உடனடியாக அவருக்கு ஓடிபி வந்துள்ளது – இதையடுத்து அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக்கு சென்று பார்த்தபோது அவருடைய வங்கிக் கணக்கில் இருந்து 7 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஞானசுந்தரி இது குறித்து மாவட்ட சைபர் கிரைம் பிரிவுக்கு இணையதளத்தின் மூலமாக புகார் தெரிவித்துள்ளார். மேலும் மாவட்ட சைபர் கிரைம் பிரிவு காவலர்களை நேரில் சந்தித்து நடவடிக்கை எடுக்கும்படி புகார் தெரிவித்துள்ளார்.