கரும்பு விவசாயிகளுக்கு இனிப்பான செய்தி… சர்க்கரை ஆலைகள் பற்றிய சங்கதி தெரியுமா?

Sugarcan

வேளாண்மை மற்றும் உழவர் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் 15 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

விளை நிலங்களில் மண் வளத்தினை அதிகரிக்கவும் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைத்திடவும் 2022 2023 ஆம் ஆண்டுகளில் நெல் தரிசில் பயிர் சாகுபடித் திட்டம் 10 லட்சம் ஏக்கரில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்

செங்கல்வராயன் பெரம்பலூர் சர்க்கரை ஆலைகளுக்கு அரவை இயந்திரம் பகுதிக்குத் தேவையான கியர்பாக்ஸ் 2 கோடியே 15 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்

வேலூர் அறிஞர் அண்ணா தர்மபுரி சர்க்கரை ஆலைகளில் அரவை இயந்திரம் மின்மோட்டார் கட்டுப்படுத்தும் கருவிகளும் செங்கல்வராயன் வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் சக்கரத்துடன் கூடிய உருளை மின்மோட்டார் கட்டுப்படுத்தும் கருவியும் 2022 2023 ஆம் ஆண்டில் 2 கோடியே 7 லட்சம் செலவில் கொள்முதல் செய்யப்படும்

கள்ளக்குறிச்சி 1 கள்ளக்குறிச்சி2 செங்கல்வராயன் பெரம்பலூர் சர்க்கரை ஆலைகளில் புதிய பொருளைக் கொள்முதல் செய்யவும் கள்ளக்குறிச்சி ஒன்று அல்லது இரண்டு எம்ஆர்கே செங்கல்வராயன் தர்மபுரி 2006 ஆண்டுகளில் கரும்பு அரவை பகுதியினை தானியங்கி மையமாகவும் 2022 23 ஆம் ஆண்டில் 3 கோடியே 81 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படும்

2022 2023 ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையில் கொதிகலன் நீரேற்றும் பம்பும் தர்ம்புரி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை நிலைய மின் மோட்டார் 1 கோடியே 35 செலவில் கொள்முதல் செய்யப்படும்

2022 23 ஆம் ஆண்டில் அறிஞர் அண்ணா பெரம்பலூர் கள்ளக்குறிச்சி சர்க்கரை ஆலையில் வழி அழுத்த முறையில் இயங்கும் பேன் திறப்பு தடுக்கிதழ் 92 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்படும்

கரும்பு தான் இதிலிருந்து எத்தனால் தயாரிப்பது ஊக்கப்படுத்தி எத்தனாலை தொடர்ச்சியாக இயங்கும் வகையில் நாள் ஒன்றுக்கு 80 ஆயிரம் லிட்டர் திறனுடன் எத்தனை பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்விட 10 லட்சம் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்

தமிழகத்தில் வெங்காய சாகுபடி பரப்பினை உயர்த்தியும் வெங்காய சேமிப்பு அமைப்புகளை உருவாக்கியும் பொதுமக்களுக்கு ஆண்டு முழுவதும் தடையின்றி வெங்காயம் கிடைக்கும் வகையில் வெங்காய சாகுபடி இயக்கம் நடப்பு நிதி ஆண்டில் 40 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்

தமிழ்நாட்டில் முந்திரி சாகுபடி அதிகரிக்க 4 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் முந்திரி மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும்

நவீன வேளாண் இயந்திரங்கள் மற்றும் வேளாண் பொறியியல் தொழில்நுட்பம் பற்றி விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நடப்பு நிதியாண்டில் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்த செயல் விளக்கங்களுடன் பயிற்சிகள் கருத்தரங்குகள் நடத்தப்படும்

வேளாண்மை பொறியியல் துறையில் உள்ள எந்திரங்களின் பயன்பாட்டினை நடப்பு நிதியாண்டில் புவியியல் தகவல் அறியும் ஜிபிஎஸ் கருவிகள் 44 லட்சம் ரூபாய் செலவில் பொருத்தப்படும்

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாரத்தில் பல மதிப்பு கூட்டு மையம் நடப்பு நிதியாண்டில் 3.75 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும் வேளாண் பொறியியல் துறையில் உள்ள சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்களை சிறு தானியம் பயறு வகை பயிர்களை அறுவடை செய்வதற்கு ஏதுவாக 18 லட்சம் ரூபாய் செலவில் 25 சக்கர வகை நெல் அறுவடை இயந்திரங்கள் மாற்றி வடிவமைக்கப்படும்

தர்மபுரி மாவட்டத்தில் மா மகத்துவ மையம் திருநெல்வேலி மாவட்டத்தில் நெல்லி மருத்துவ மையமும் 6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையை மீண்டும் இயக்கத்திற்கு கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய நடப்பு நிதியாண்டில் ஒரு குழு அமைக்கப்படும்

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…