கோயில்களை இடிக்க இடைக்கால தடை… உயர் நீதிமன்றம் உத்தரவு!

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நூறாண்டுகள் பழமையான இரண்டு கோவில்களை இடிக்க இடைக்கால தடைசென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், பள்ளபாளையத்தில் உள்ள கருப்பராயசுவாமி கோவிலும், வடுகபாளையத்தில் உள்ள கருவந்தராய சுவாமி கோவிலும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி கோவில்களை இடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இதற்கு எதிராக என்பவரும் கோபிநாதனும், கிருஷ்ணசாமி என்பவரும் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், நூறாண்டுகள் பழமையான இந்த கோவில்கள் வருவாய் துறை ஆவணங்களில் இடம்பெறுவதில்லை என்றும், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கோவில்கள் கட்டப்பட்டதாக கூற எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் கோவில்களை இடிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் தரப்பு வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
பழமையான இரண்டு கோவில்களை இடிக்க இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், மனு தொடர்பாக பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.