சொன்னீங்களே.. செஞ்சீங்களா… குமுறும் கும்பகோணம் மக்கள்!

திமுக ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிப்போம் என தெரிவித்து 300 நாட்கள் ஆகியும் நிறைவேற்றாததால் வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 15ம் தேதி நடைபெற உள்ளதாக கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்பு குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள செய்தியாளர்கள் மன்றத்தில் கும்பகோணம் புதிய மாவட்டம் கோரும் ஒருங்கிணைப்பாளர்கள் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, பேசிய ஒருங்கிணைப்பாளர் ம.க.ஸ்டாலின்
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் சட்டமன்றத்தில் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவிப்பார் என சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

ஆனால் அதற்கு மாறாக கும்பகோணத்தை அறிவிக்காமல், மயிலாடுதுறை மாவட்டத்தை அறிவித்தார்கள், இருந்தபோதிலும் நாங்கள் அதிமுக அரசிற்கு நன்றி தெரிவித்தோம். உடனடியாக கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென பல கட்ட போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தோம்.

அனைத்து மக்களும் சேர்ந்து நடத்திய போராட்டத்தின் அடிப்படையில் சட்ட மன்றத்தில் ஸ்டாலின் அவர்கள் திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களுக்குள் கும்பகோணத்தை புதிய மாவட்டமாக அறிவிப்போம் என தெரிவித்தார்.

ஆனால், முதல்வராக பதவியேற்ற பிறகு அவரை சந்திக்க வாய்ப்பு கேட்டும் கிடைக்கவில்லை.

ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் கும்பகோணத்தை மாவட்டமாக அறிவிப்போம் என முதல்வர் கூறிய நிலையில் தற்போது 300 நாட்கள் ஆகியும், அறிவிக்காத காரணத்தால் கொடுத்த வாக்குறுதிய நிறைவேற்றக்கோரி முதல்வர் ஸ்டாலினின் கனத்திற்கு கொண்டு செல்ல கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 15ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…