சித்திரை திருவிழா கோலாகலம்: அரசு செய்திருந்த சிறப்பு ஏற்பாடுகள் என்னென்ன?

Meenakshi

மதுரையில் சித்திரைத் திருவிழாவை இத்திருக்கல்யாண நிகழ்ச்சியை காண வரும் பக்தர்களுக்கு வசதியாக தெற்கு கோபுர வாசல் வழியாக இலவச தரிசன பக்தர்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு கோபுர வாசல் வழியாக முக்கிய பிரமுகர்கள், உபயதாரர்கள், கட்டளைதாரர்கள் மற்றும் அரசு நிர்வாக அதிகாரிகளும், ரூ.500/- மற்றும் ரூ.200/- கட்டண சீட்டு பெற்றுள்ள பக்தர்கள் வடக்கு கோபுர வாசல் வழியாகவும் திருக்கோவிலுக்குள் செல்ல இந்து சமய அறநிலையத்துறையினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இத்திருக்கல்யாண நிகழ்ச்சியை காண வரும் பக்தர்கள் அனைவரும் நாளை காலை 07.00 மணி முதல் மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு கோபுர நுழைவு வாசல்களில் பரிசோதனைக்கு பின்பு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

பக்தர்கள் எப்பொருட்களையும் (செல்போன் உட்பட) எடுத்து வர அனுமதியில்லை.

பக்தர்கள் மேற்கு மற்றும் வடக்கு ஆடி வீதிகளில் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் அமரும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருக்கல்யாண நிகழ்ச்சி முடிந்த பின்பு பக்தர்கள் வடக்கு மற்றும் மேற்கு கோபுரங்கள் வழியாக வெளியே செல்ல வேண்டும்.

தற்போது கொரோனா வைரஸ் பரவல் குறைந்துள்ள போதிலும், முற்றிலுமாக ஒழியவில்லை என்பதால், பக்தர்கள் அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.

பக்தர்களின் நலன் கருதி மதுரை மாநகர காவல்துறை முகக்கவசம் மற்றும் குடி தண்ணீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பக்தர்கள் அனைவரும் தாங்கள் அணிந்து வரும் நகைகளை பாதுகாப்புடன் வைத்துக்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

காவல்துறை சார்பில் நகைகளை பாதுகாக்க SAFETY PIN வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்ச்சியினை காண வரும் பக்தர்கள், தங்களது வாகனங்களை நிறுத்துவதற்கு மஞ்சள் நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் மேற்காவணி மூல வீதியிலும், பிங்க் நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் வடக்கு ஆவணி மூல வீதியிலும், நீல நிற அனுமதி அட்டை பெற்றிருந்தால் தெற்கு ஆவணி மூல வீதியிலும், அனுமதி அட்டை இல்லாதவர்கள் தெற்கு மற்றும் வடக்கு மாசி வீதிகளில் வாகனங்களை நிறுத்தும் படி அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published.