அக்னி நட்சத்திரத்தை ஆஃப் செய்த மழை!! இன்னும் 5 நாட்களுக்கு தொடரும்..

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே இன்று ன்னியாக்குமரி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பதூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நாளை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள், டெல்டா மாவட்டங்கள் அதை ஒட்டிய மாவட்டங்கள், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருப்பத்தூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

வருகின்ற மே 8, 9 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் மே 10ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்கள் கன்னியாகுமரி, திருநெல்வேலியில் மழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மேலும், சென்னையை பொருத்தவரையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *