சினிமா பிரபலங்கள் தலைமையில் கலை நிகழ்ச்சி… கலக்கிய பாட்ரிஷியன் கல்லூரி!

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் 2 நாட்கள் கலை நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

சென்னை அடையாரில் உள்ள பாட்ரிஷியன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 05/05/2022, 06 / 05 / 2022 ஆகிய இரண்டு நாட்களுக்கு கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன. முதல் நாள் டாணாக்காரன் பட இயக்குநரும், ஜெய்பீம் , அசுரன் உள்ளிட்ட படங்களில் வில்லன் நடிகராக அசத்தியவருமான தமிழ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்.

‘எங்கேயும் எப்போதும்’, ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘நெடுஞ்சாலை’, ‘பொன்மாலை பொழுது’, ‘இவன் வேற மாதிரி’, ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’, ‘காஞ்சனா – 2′ போன்ற படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சத்யா இரண்டாவது நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பித்தார்.

கலை நிகழ்ச்சியின் முடிவில் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு பட்டங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். மிஸ்டர் Evoluzion பட்டத்தை ஊடகத்துறை மாணவர் கிறிஸ்டோ எபிநேசர், மிஸ் Evoluzion பட்டத்தை ஆங்கிலத்துறை மாணவி அமன்டா மரியா எட்மன்ட், மிஸ்டர் பாட்ரிசியன் பட்டத்தை மனோதத்துவியல் துறை மாணவர் கௌஷிக், மிஸ் பாட்ரிசியன் பட்டத்தை ஊடகவியல் துறை மாணவி கெத்சியாள் ஆகியோர் வென்றனர்.

பல போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற பல துறைகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.கலை நிகழ்வின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை மேலாண்மை துறையும், முதல் இடத்தை  வணிகவியல் துறையும், இரண்டாம் இடத்தை ஆங்கிலத் துறையும் பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் கோப்பைகள் பரிசுகளாக வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி இயக்குநர் மற்றும் செயலாளர் அருட் சகோதரர் டாக்டர் S.ஆரோக்கியராஜ், கல்வி இயக்குநர் டாக்டர் பாத்திமா வசந்த், முதல்வர் டாக்டர் உஷா ஜார்ஜ், துணை முதல்வர்கள், டாக்டர் கீதா ரூபஸ், டாக்டர் மீனா, கலை நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், என நூற்றுக்கணக்கானோர் விழாவில் கலந்து கொண்டனர். ஒட்டு மொத்த கலை நிகழ்ச்சியையும் ஒருங்கிணைத்தவர் கலை நிகழ்வுக் குழு ஒருங்கிணைப்பாளரும் சமூகப் பணித் துறை பேராசிரியருமான லியான் மரியாவிற்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *