தருமபுர பட்டனப் பிரவேசம்: கிரீன் சிக்னல் காட்டிய முதல்வர்!!

மயிலாடுதுறையில் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீனம் செயல்பட்டு வருகிறது. சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் ஆதீனத்தில் வைகாசி மாதம் குரு பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 9 நாட்கள் குருபூஜை நடைபெற்று 10- வது நாளில் தருமபுரம் ஆதீனத்திற்கு பட்டின பிரவேசம் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்நிலையில் வருகின்ற 22- ஆம் தேதி நடைபெறும் பட்டனப் பிரவேசத்தில் சுவாமிகளை பல்லக்கில் தூக்கி அமர்த்தி செல்வது மனித உரிமை மீறல் என திராவிட கழக திட்டம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பட்டின பிரவேச நிகழ்வுக்கு மயிலாடுதுறை மாவட்ட வருவாய்த் துறை தடை விதித்தது.

இதற்கு பாஜக, அதிமுக போன்ற கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து இந்த விவகாரத்தில் முதல்வர் நல்ல முடிவு எடுப்பார் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். அதோடு நேற்றைய தினத்தில் மயிலம் பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமி, கோவை பேரூர் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மற்றும் மயிலாடுதுறை தருமபுரி ஆதீனம் தம்பிரான் ஆகியோர் முதல்வரை சந்தித்து பட்டின பிரவேசத்திற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

குறிப்பாக முதல்வர் ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவு பெற்ற தினத்தில் கோரிக்கை விடுப்பதால் இந்த விவகாரத்தில் முதல்வர் நல்ல முடிவை எடுப்பார் என அவர்கள் தெரிவித்தனர். இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தர்மபுரம் ஆதீனம் பட்டின பிரவேசம் நடத்த தமிழக முதல்வர் வாய்மொழியாக அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு நிறைய தொண்டர்கள் ஆதீனத்தை சுமக்க கலந்து கொள்வார்கள் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *