இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்! மலைப்போல் சரிந்த தங்கம் விலை..
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபகாலங்களில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. குறிப்பாக அட்சய திருதியையில் குறைந்த தங்கம் விலை அடுத்தநாளே உச்சத்தை தொட்டது. இதனால் நகை வாங்கும் பிரியர்கள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாயினர்
இதனிடையே தற்போது சென்னையில் ஆரணத்தங்கத்தின் அதிரடியாக குறைந்துள்ளது. அந்த வகையில் கிராமுக்கு 59 ரூபாய் ஒரு கிராம் 4,787 – ஆக விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ. சவரனுக்கு 38,296 விற்க்கப்படுகிறது.
அதே போல் தூயதங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 64 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ. 5,222 – ஆக விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.41,776- ஆக விற்பனையாகிறது.
மேலும், ஒரு கிராம் வெள்ளி 64.80 காசுகளாகவும், ஒரு கிலோ 64,800 -க்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.