மாணவர்களுக்கு அடித்த ’ஜாக்பாட்’… பள்ளிகள் திறக்கும் தேதி ஒத்திவைப்பு !!

விடுமுறை

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டது. இதனிடையே தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவந்து அனைத்து பள்ளிகளிலும் படிபடியாக திறக்கப்பட்டது.

இந்நிலையில் நடப்பாண்டில் இறுதி தேர்வு நடத்தப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்படுமா என்ற சந்தேகம் அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்தது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்தாண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது

அந்த வகையில் கடந்த வாரம் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கடந்த வாரம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு இம்மாதம் இறுதி வாரத்தில் தேர்வுகள் முடியும் என தெரிகிறது.

இந்த சூழலில் 1 முதல் 9-ஆம் வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இறுதித்தேர்வு நடந்து முடிந்த நிலையில் வருகின்ற ஜூன் 13 ஆம் தேதி வரையில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றியமைக்கப்பட்டதாகவும் பள்ளிகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…