ஊழலை தடுக்க நடவடிக்கை எடுங்க: விவசாயிகள் கோரிக்கை !!

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர். நலத்துறையில் ஊழல்கள் தலைவிரித்து ஆடுவதாக குற்றம்சாட்டுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலராக கீதாலட்சிமி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த அலுவலகத்தின் கீழ் செயல்படும் மாணவர்கள் விடுதிகளில் பெருமளவு ஊழல் நடைபெறுவதாக கிடைத்த புகாரின் பெயரில் அம்மாவட்ட ஆட்சியர் கடந்த வாரம் 108 விடுதிகளில் அதிரடி சோதனை நடத்தினார்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய திட்டங்கள் அனைத்தும் அரசு அலுவலக ஊழியர்கள் முறைகேடாக பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிபாக போர்வெல் போடுவதற்கு 1 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டு 50 ஆயிரம் மானியம் வழங்குவதாக அரசு அறிவித்தது. இதற்காக 160 விவசாயிகள் விண்ணப்பம் அழித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என விவசாயிகள் கூறியுள்ளனர்.

அதே போல் மாணவர்களுக்கும் விடுதிகளில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுவதாகவும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் அதிகாரிகளுக்கு மாணவர்கள் வாட்ஸ் அப் மூலம் புகார் அளிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும், மாவட்ட அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அரசின் பல்வேறு திட்டங்களை தங்களுக்கு தேவையானோருக்கு மட்டுமே கொடுப்பதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டுகின்றனர். இவற்றை தீவிரமாக கண்காணித்து தவறிழைக்கும் ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *