உணவக உரிமையாளர்களுக்கு அடித்த ‘ஜாக்பாட்’…. சிலிண்டர் விலை குறைந்தது !!

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான வர்த்தக சிலிண்டர் விலை ரு.135 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒவ்வொரு மாதமும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டரின் விலையை உயர்த்துவது வழக்கம். அந்த வகையில் மாதத்தின் முதல் நாளான இன்று சிலிண்டர்களின் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களாக சிலிண்டர் விலை உயர்ந்த நிலையில் இன்று வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனிடையே 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலையானது ஏற்கனவே ரூ.2508 ஆக விற்பனை செய்யப்பட்டது.

இந்த சூழலில் தற்போது ரு.135 குறைக்கப்பட்டு சென்னையில் ரூ.2373ஆக விற்பனையாகுவதால் உணவக உரிமையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும், வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் 1018.50 என்ற அளவில் விற்பனையாகுவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *