தினமும் கேரட் ஜூஸ் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?

உணவில் சேர்த்து உண்ணத்தக்க காய்கள் பல உள்ளது. அதில் பூமிக்கு அடியில் விளையும் கிழங்கு வகை காய்களும் அடங்கும். இப்படிப்பட்ட சத்துக்கள் நிறைந்த உடலுக்கு நன்மைகள் பயக்கும் காய்கறிகள்தான் கேரட். இந்த கேரட்டை தினமும் ஜூஸ் போட்டு குடிப்பதன் மூலம் வயதாகும்போது எலும்பு உறுதித் தன்மை இழக்கும் அப்போது எலும்புகள் வலுவடைந்து உறுதித்தன்மை கிடைக்கும்.

நமது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் ஏற்படுகிறது. இவர்கள் கேரட் ஜூஸை அதிகமாக குடிக்கும் போது வெகு விரைவில் காயம் ஆறும். நாம் உண்ணும் உணவில் அதிக அளவு கொலஸ்ட்ரால் சேர்வது என்பது உடலிற்கு தீங்காக அமைகிறது. தினமும் கேரட் ஜூஸ் அருந்துவது மூலம் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கிறது.

ரத்த காயங்கள் ஏற்படும்போது ரத்தம் விரைவாக உறைவதற்கு ஹீமோகுளோபின் புரதம் சரியான அளவில் இருக்க வேண்டும். கேரட் ஜூஸ் குடிப்பதால் இதன் அளவு சமநிலையாக வைக்கப்படுகிறது. தினந்தோறும் கேரட் ஜூஸ் அருந்துபவர்களுக்கு அவர்களின் உடலில் இருக்கும் செல்களின் ஆயுள் தன்மை அதிகரிக்கும். இதன் காரணமாக அவர்களின் உடலில் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரட்டில் கண் பார்வை சரியாக இருப்பதற்கான வைட்டமின்கள் நிறைந்து இருப்பதால் கண் பார்வை மேம்படுவதோடு கண்ணில் புரை ஏற்படுவதை தடுக்க உதவுகிறது. பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் மாதவிடாய் காரணமாக சிலருக்கு அதிக வலி மற்றும் ரத்தப்போக்கு ஏற்படுகிறது.

இவர்கள் கேரட் ஜூஸ்ஸை அருந்துவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். தொற்று நோய் பாதித்தவர்கள் கேரட் ஜூஸ் குடிப்பதன் மூலம் ரத்தத்தில் உள்ள வேதிப்பொருட்களை தூய்மைப்படுத்தி தொற்றிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *