பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு !!

திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக விவசாயிகள் பயன்பெறும் வகையில் குறுவை சாகுபடிக்காக அணையில் நீர் திறக்கப்படுவதை வழக்கமாக தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில் பாசனத்திற்காக இன்று வைகை அணையில் இருந்து 900 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் இருப்பு வழக்கமாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் திறப்பது வழக்கம். குறிப்பாக மதுரை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களுக்கு வைகை அணையில் இருந்து நீர் திறக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மூர்த்தி ஆகியோர் காலை 10 மணியளவில் நீரை திறந்து வைத்தனர். இதனிடையே முதல் போக்கு காரணத்திற்காக வைகை அணையில் இருந்து 900 ஆயிரம் கன அடி நீர் திறக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நீரானது சுமார் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து முதல் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், பின்னர் இருப்பை பொருத்தும் தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது திறக்கப்படும் தண்ணீரில் சுமார் 45,041 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் பொதுப்பணி துறையினர் கூறியுள்ளனர். மேலும், இந்தாண்டு சரியான நேரத்தில் முதற்போக்கு பாசன வசதிக்காக தண்ணீர் திறக்கபடுவதால் விவசாயிகள் மகிழிச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *