தமிழ்நாட்டில் 12 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் பாதிப்பு: அமைச்சர் தகவல்!!

தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனா தற்போது தீவிரமடைந்து மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் கொரோனாவின் திரிபால் பிஏ1, பிஏ2 என இருந்த நிலையில் தற்போது புதிதாக பிஏ4 மற்றும் பிஏ5 வகை கொரோனா அண்மையில் வெளிநாடுகளில் பரவ தொடங்கியுள்ளது.

இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நாவலூர் பகுதியில் பிஏ4 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த மற்ற நபர்களும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே அவருடன் தொடர்பில் இருந்த 150 நபர்களிடம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு ஹைதராபாத் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையில் என்று சோதனை முடிவுகள் வெளியாகியது. அதில் பிஏ4 கொரோனா தொற்று 4 பேருக்கும் பிஏ5 கொரோனா தொற்று 5 பேருக்கும் என மொத்தம் 12 பேருக்கு உருமாறிய ஒமிக்ரான் பாதிப்பு உறுதியாகியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், உருமாறிய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 12 நபர்களும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *