சென்னையில் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு !!

கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக அரசு சார்பில் மலர் கண்காட்சியானது ஜூன் 1-ஆம் தேதி உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். குறிப்பாக ஊட்டியை போன்று சென்னையிலும் மலர் கண்காட்சி தொடங்க வேண்டும் என அமைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தில் 5 முறை முதல்வராக பதவி வகித்த கலைஞரின் பிறந்த நாள் அரசு விழாவாக நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஜூன் 3-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு தோட்டக்கலை சார்பில் பிரமாண்ட மலர் கண்காட்சி நடைபெற்றது.

இதற்காக பெங்களூரு, உதகை, கிருஷ்ணகிரி, ஏற்காடு, புனே போன்ற பகுதிகளில் கொண்டுவரப்பட்ட 200-க்கும் மேற்பட்ட மலர்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. இந்த மலர் கண்காட்சியில் மயில், குதிரை, சிங்கம், கரடி, சிற்பங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்த சூழலில் 5- தேதி வரையில் நடைபெறும் மலர் கண்காட்சியை காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரையில் பொதுமக்கள் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்றுடன் மலர் கண்காட்சி முடிவடையவுள்ளதால் மலர் கண்காட்சியை பார்வையிட ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

மேலும், இந்த கண்காட்சியைகாண நுழைவிக்கட்டணமாக மாணவர்களுக்கு ரூ.20, பெரியவர்களுக்கு ரூ.50 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *