பள்ளிகள் திறப்பு! மோட்டு, பட்லுவுடன் மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்…

கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் தொற்று பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. அதோடு அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுகள் நடத்தப்பட்டு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் இன்று 1 முதல் 10 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களை வரவேற்க வித்தியாசமான முறையில் இனிப்புகள் வழங்குவது, மேளதாளத்துடன் வரவேற்றனர். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உள்ள ஊமச்சிகுளம் உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்றனர்.

இதனிடையே மாணவர்களை கவரும் விதமாக மோட்டு பட்லு பிரமாண்டமான பொம்மைகள் கொண்டு வரப்பட்டு மாணவர்களை வரவேற்றனர். இதனை கண்டதும் குதூகலமடைந்த மாணவர்கள் இந்த பொம்மையை தொட்டுப்பார்த்தும், கட்டித் தழுவியும், அதனுடன் விளையாடியது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து மோட்டு, பட்லு பொம்மைகள் வரவேற்பு நிகழ்ச்சி முடிந்த பிறகு மாணவர்களுக்கு ரோஜா பூக்கள் மற்றும் சாக்லேட்டுகள் மற்றும் விவேகானந்தரின் கை அடக்க புத்தகங்களையும் வழங்கியது மேலும் அவர்களுக்கு உற்சாகத்தை அழித்தது. பின்னர் ஆசிரியர்கள் அறிவுரைகள் வழங்கியதையடுத்து மாணவர்கள் உற்சாகத்துடன் வகுப்பறைக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *