டேபிள் தொடைக்கிறதுக்கெல்லாம் ரோபோவா – கூகுள் நிறுவனத்தின் அட்ராசிட்டி

ரோபோக்கள் உலகின் வல்லமை வாய்ந்த ஆதிக்க சக்தியாக மாறிவருகின்ற யுகம் நம் கண்ணேதிரே நடந்துக் கொண்டிருக்கிறது. இது டெர்மினேட்டர் படத்தில் வருவது போலவோ, எந்திரன் சிட்டி போன்றோ அழிக்கும் ஆற்றலாக இல்லாமல் ஒரு ஆக்க புரட்சி போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போதைய கணக்கெடுப்பின் படி உலக தரம் வாய்ந்த பல தொழில் நிறுவனங்கள் மனித ஊழியர்களுக்கு மாற்றாக தொழிற்நுட்ப திறன் கொண்ட தானியங்கி இயந்திரங்களை(Robots) பயன்படுத்த தொடங்கிவிட்டன.

           இன்றைய டிஜிட்டல் உலகில் அனைத்துமே இயந்திரமயமாகி வருகிறது. இந்நிலையில் உலகின் முன்னணி டெக்னாலஜி நிறுவனமான கூகுள் நிறுவன அலுவலக வளகாத்தில் ‘கதவை திறப்பது, டேபிள்களை துடைப்பது, குப்பைகளை அகற்றுவது, நாற்காலிகளை வரிசைப்படுத்துவது’ மாதிரியான சின்னஞ்சிறிய அன்றாட பணிகளை செய்ய ‘ரோபோக்கள்’ களம் இறக்கப்பட்டுள்ளன.இதனை ஆல்பாபெட்டின் ‘X’ வடிவமைத்துள்ளது. சுமார் 100 ரோபோக்கள் கூகுள் நிறுவனத்தில் அலுவலகத்தில் உலாவிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தானியங்கு முறையில் இயங்கும் இவை, மாதிரி (Prototype) என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோக்களை ‘Everyday Robots’ என தெரிவித்துள்ளனர் இதனை வடிவமைத்த வடிவமைப்பாளர்கள்.

‘பல ஆண்டுகளாக இந்த முயற்சியை மேற்கொண்டோம். ரோபோக்களுக்கு கட்டமைக்கப்படாத ஒரு இடத்தில் எப்படி செயல்படுதுவது என்ற புரிதலை கற்றல் மூலமாக கொடுக்க முயன்றோம். இதுவரையில் எங்களது ஆய்வு கூடத்தில் வலம் வந்த ரோபோக்கள், இனி அலுவலகத்தின் சில இடங்கில் வலம் வர உள்ளன’ என தெரிவித்துள்ளார் தலைமை ரோபோ அலுவலர் Hans Peter Brøndmo.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *