வெரிஃபைட் ட்விட்டர் கணக்கு மூலம் புதிய ஹேக்கிங் உஷார்..!

பலருடைய ட்விட்டர் கணக்கை வெரிஃபைட் ட்விட்டர் கணக்கு மூலம் போலியான குறுஞ்செய்தி அனுப்பி ஹேக் செய்து வருவது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் அதிக நபர்கள் பயன்படுத்தும் சமூகவலைதளங்களில் ஒன்று. இந்த தளத்தில் வெரிஃபைட் கணக்குகள் என்று சில கணக்குகள் உள்ளன. அந்த கணக்குகளை வெரிஃபைட் கணக்காக மாற்ற ட்விட்டர் சில நடைமுறைகளை வைத்துள்ளது. இதனால் வெரிஃபைட் கணக்குகளில் இருந்து வரும் பதிவுகள் மற்றும் தகவல்களை பெரும்பாலனவர்கள் நம்புவது வழக்கம். 

இந்நிலையில் அந்த வழக்கத்தை பயன்படுத்தி தற்போது ஒரு புதிய வகையில் போலி செய்தியை அனுப்பி சிலருடைய கணக்கு ஹேக் செய்து வருகின்றனர். அதாவது ஒரு வெரிஃபைட் ட்விட்டர் கணக்கில் இருந்து சிலருக்கு உங்களுடைய ட்வீட்களில் காப்புரிமை மீறல் நடந்துள்ளது. அதற்கு இந்த கூகுள் ஃபார்மில் உங்களுடைய கணக்கை வெரிஃபை செய்யுங்கள் என்று வந்துள்ளது. அதை க்ளிக் செய்து உங்களுடைய கணக்கின் பாஸ்வேர்டை அடித்தவுடன் அவர்களுடைய ட்விட்டர் கணக்கு முடக்கப்படுகிறது. நேற்றிலிருந்து இன்று வரை பல்வேறு நபர்களின் ட்விட்டர் கணக்கு இதுபோன்று முடக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *