காதலருக்கு வந்த குட் நியூஸ்! இரண்டு நாள் கழித்தும் வாட்ஸ்அப் மெசேஜ்ஜெய் டெலீட் செய்யலாம்

வலிமை படத்திற்கு வேண்டுமானால்  வருட கணக்கில் அப்டேட் வராமல் இருக்கலாம். ஆனால் வாட்ஸ் ஆப்பில் வாரம் வாரம் அப்டேட் வந்து கொண்டிருக்கும். அந்த வகையில் இந்த வாரமும் ஒரு புதிய அப்டேட் வந்துள்ளது.பயனாளர்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யும் வசதிக்கு, கூடுதல் நேரம் வழங்கிட திட்டமிட்டுள்ளது. தற்போது, வாட்ஸ்அப்பில் நீங்கள் அனுப்பிய மெசேஜை 1 மணி நேரம் 8 நிமிடங்களுக்கு பிறகு டெலிட் செய்திட முடியாது. ஆனால், புதிய அப்டேட்டில் 2 நாள் 12 மணி நேரத்திற்குள் டெலிட் செய்யும் வகையிலான வசதி வழங்கப்படுகிறது.

இதன் மூலம், பயனாளர்கள் தனிப்பட்ட சாட்டிலும், குரூப் சாட்டிலும் அனுப்பிய மெசேஜ்களை அழித்திட கூடுதல் நேரம் கிடைக்கிறது. கிடைத்த தகவலின்படி, இந்த அப்டேட் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 2.22.410 இல் காணப்பட்டதாக கூறப்படுகிறது. விரைவில் அனைத்து சாதனங்களுக்கு கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   முதலில் வாட்ஸ்அப் பயனர்கள் தாங்கள் அனுப்பிய மெசேஜெய் 7 நிமிடங்களுக்குள் டெலீட் செய்யமாறு இருந்தது.பின் 2018-ம் ஆண்டு இந்த தடவை லிமிட் 1 மணி நேரமாக உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, வாட்ஸ்அப் ஒரு வாரம் டைம் லிமிட் கொடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கான பரிசோதனை நடைபெறுவதாகவும் தகவல்கள் கசிந்தன. ஆனால், அந்த பிளேனை செயல்படுத்தாமல், 2 நாள் 12 மணி நேர திட்டத்தை வாட்ஸ்அப் கையில் எடுத்துள்ளது.

இதுதவிர, வாட்ஸ்அப் communities புதிதாக introductory screen அம்சத்தை பெறுகின்றன. இதில், குரூப் அட்மின்கள், தாங்கள் நிர்வகிக்கும் குழுக்களை ஒரே இடத்தில் விரைவாக அணுகிட உதவியாக இருக்கும். இதன் மூலம், பயனர்கள் அனைத்து குழுக்களுக்கும் மற்றும் பலவற்றிற்கும் அறிவிப்புகளை எளிதாக அனுப்பிட முடியும்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…