மூக்கு பொடப்பா  இருந்தா இப்படித்தான் யோசிக்க தோணும் ! இனி சாப்பிடும் போது கூட மாஸ்க்கை கழற்ற தேவையில்லை

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவியது. இதனால் மக்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த கொரோனாவால் போட்டபட்ட பொதுமுடக்கத்தால் மக்கள் வீட்டிலிருந்தே பணி  செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் இந்த பொதுமுடக்கத்தில் புது புது விஷயங்களை மக்கள்  பின்பற்ற வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். அதாவது மாஸ்க் போடுவது, சானிடைசரை பயன் படுத்துவது, வெளியே சென்றால் கைகளுக்கு உறை போட்டு கொள்வது என புதிதாக பல விஷயங்களை பின்பற்றினோம்.

பின்பு காலப்போக்கில் இதுவே பேஷனாக மாறியது. உதாரணமாக டிசைன் செய்யப்பட்ட முக கவசங்கள், நறுமணம் தரும் சானிடைசர்கள், நிறைய வண்ணங்கள் கொண்ட கையுறைகள் என கொரோனாவுக்கு ஏற்றாற்போல் டிசைன்கள் வர தொடங்கின.

இந்நிலையில் மூக்கை மட்டும் மறைக்க கூடிய வகையிலான முகக்கவசத்தை வடிவமைத்துள்ளது தென் அமெரிக்காவை சேர்ந்த அட்மன் என்ற நிறுவனம்.இந்த முகக்கவசத்தை அணிந்து கொண்டால், சாப்பிடும்போது கூட பாதுகாப்புடனேயே இருக்கலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.     

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….