இனி எத்தன நாள் கரண்ட் போனாலும் பிரச்சனை இல்ல! மெகா சைஸ் பவர் பேங்க் கண்டுபிடித்த யூடியூபர்

தற்போதுள்ள நவீன உலகத்தில், நாம் தூங்கும் நேரத்தை தவிர அனைத்து நேரங்களிலும் நம்முடைய ஸ்மார்ட்போன்கள் நம் கையிலே இருக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம்.வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவது முதல் அலுவலக பணி வரை அனைத்திற்குமே நமக்கு ஸ்மார்ட் போன் தேவைப்படுகிறது.
குறிப்பாக இளைஞர்கள் போன் இல்லாமல் ஒரு நொடி கூட இருக்க மாட்டார்கள். போன் சார்ஜ் ஏறும் போது கூட அதனை பயன்படுத்தி கொண்டே இருப்பார்கள்.இந்நிலையில் ஒரே நேரத்தில் சுமார் 5000 செல் போன்களை சார்ஜ் செய்து கொள்ளும் வசதி கொண்ட 2 கோடியே 70 லட்சம் mAh திறன் கொண்ட பவர் பேங்க்-ஐ வடிவமைத்துள்ளார் சீனாவை சேர்ந்த யூடியூபர் Handy Geng என்பவர்.இந்த பவர் பேங்க் 5.9 அடி நீளம் கொண்டது. இதில், டி.வி மற்றும் வாஷிங் மெஷினுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க முடியும் என தெரிவித்துள்ளார்.