அம்மாகளுக்கு வந்த குட் நியூஸ் – பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட  Free Fire கேம்

தற்போதுள்ள நவீன உலகத்தில் குழந்தைகள் வெளியே வந்து விளையாடுவதை காட்டிலும், வீடியோ கேம்களை விளையாடுவதில் தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த அளவிற்கு தொழில்நுட்பம் குழந்தைகளை கவர்ந்துள்ளது.அப்படி என்ன தான் இந்த வீடியோ கேமில் இருக்கிறது என்று பார்த்தால், சிறிய குழந்தைகளும் வயதுக்கு மீறிய சாகசங்களை செய்ய முடியும் என்பதே. உதாரணமாக ஒரு 14 வயது சிறுவன் துப்பாக்கியால் சுட முடியும். 10 வயது சிறுமி விமானம் ஓட்ட முடியும். இதனால் தான் குழந்தைகள் இதனை மிகவும் விரும்புகின்றனர். அந்தவகையில் கடந்த 5 ஆண்டுகளாக சிறுவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த ஆன்லைன் கேம்களில் free fire  கேம்மும் ஒன்று.

இப்படி புகழ்பெற்ற free fire கேமை கூகுள் பிளே ஸ்டோர் மாற்று ஆப்பிள் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. free fire max  மட்டும் தான் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ளது. ஆனால் ஆப்பிள் ஸ்டோரில் இரண்டு கேம்களும் இல்லை.

இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் கரீனா நிறுவனம் வெளியிடவில்லை.

இதனால் இந்தியாவில் free fire  கேம் தடை செய்யப்பட்டுள்ளதாக பல வதந்திகள் பரவி வருகின்றன. எவ்வாறாயினும், இவை வெறும் வதந்திகள் என்பதை கரீனா நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் அவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளிவரும் வரை எந்த தகவலையும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *