இனி அலைய வேண்டாம்… ஆதார் முகவரி மாற்றத்தில் வந்தாச்சு புது அப்டேட்!

ஆதாரில் முகவரியை மாற்றினால் டிஜிலாக்கரில் சேமிக்கப்பட்டுள்ள பயனாளரின் ஓட்டுநர் உரிமத்தில் உள்ள முகவரி தானாகவே புதுப்பிக்கும் படியான நடைமுறைக்கு இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது.
டிஜிலாக்கரில் உங்கள் வாகனப்பதிவு ஆவணங்கள், பான் கார்டு, காப்பீட்டு அட்டை, பள்ளி மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்கள், மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சேமித்து வைக்கலாம். இவ்வாறு டிஜிலாக்கரில் ஆவணங்களை சேமித்து வைக்கும் பயனாளர்கள் இனி ஒவ்வொரு அலுவலகமாக ஏறி, இறங்க வேண்டிய வேலை இருக்காது.
ஒரு ஆவணத்தில் செய்யப்படும் மாற்றத்தை சரிபாப்பு முறையில் பிற ஆவணங்களிலும் புதுப்பிக்க இந்த புதிய நடைமுறை உதவ உள்ளது. எடுத்துக்காட்டாக ஆதார் முகவரியை மாற்றினால், ஓட்டுநர் உரிமத்தில் அதை புதுப்பிப்பதற்காக தனியாக ஒரு விண்ணப்பத்தை தூக்கி கொண்டு நீங்கள் போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டியது இல்லை. நீங்கள் டிஜிலாக்கரில் உங்களுடைய ஆவணங்களை சேமித்து வைத்திருந்தால் அதில் உள்ள டிரைவிங் லைசன்ஸில் முகவரி தானாகவே அப்டேட் செய்யப்படும்.
டிஜிலாக்கரில் அதிகபட்சமாக 10 எம்.பி. வரையிலான கோப்புகளை சேமிக்கலாம். மேலும் பிடிஎஃப், ஜேபிஜி, பிஎன்ஜி போன்ற வடிவங்களிலும் கோப்புகளை டிஜிலாக்கரில் பதிவேற்றம் செய்ய முடியும். டிஜிலாக்கரில் சேமிக்கப்பட்டுள்ள ஆவணங்களை பயனர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், எப்போதும் அணுக முடியும்.