எங்களுக்கும் இதெல்லாம் தெரியும்.. எமோஜிகளை அறிமுகப்படுத்தும் “யூடியூப்”..

கோடிக்கணக்கான பயனாளர்கள் கொண்ட யூடியூப் நிறுவனமானது தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருப்பது போன்று ரியாக்ஷன்ஸ் அம்சம் கொண்ட எமோஜிகளை யூடியூபில் வெளியிட உள்ளது.
லைக், டிஸ்லைக், கமெண்ட் என்ற 3 ஆப்ஷன்கள் மட்டும் கொண்ட யூடியூபில் தற்போது இந்த ரியாக்ஷன்ஸ் வசதியை கொண்டு வருவதில் மூலம் பயனாளர்களை மேலும் அதிகரிக்க செய்ய முடியும் என யூடியூப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
வீடியோ பார்க்கும்போது நமக்கு பிடித்த இடத்தில் எமோஜிகள் மூலம் தம்முடைய விருப்பத்தை வெளிப்படுத்தலாம் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போது சோதனைக்காக ஒரு சில எமோஜிக்கள் களை மட்டும் பயன்படுத்த முடியும்.
இந்த சோதனை வெற்றியடையும் நிலையில் மற்ற ரியாக்ஷன்ஸ் களை யூடியூப் கொண்டுவரப்படும் என தெரிவித்து உள்ளது.ஏற்கனவே யூடியூப் டிஸ்லைக் என்ற ஆப்ஷனை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.