இன்ஸ்டாகிராம் புதிதாக அறிமுகம் செய்த ஏழு அசத்தலான அம்சங்கள்..

உலகம் முழுக்க கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் தற்போது ஏழு புதிய அம்சங்களை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி ரீல்ஸ், ஸ்டோரிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்த இன்ஸ்டாகிராம் தற்போது சாட், ஷேர் மற்றும் ரெஸ்பான்ஸ் அம்சங்களுக்கு மேலும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளது.
அந்த ஏழு அம்சங்கள் பின்வருமாறு:
1. முதல் அம்சமாக இன்ஸ்டாவில் நாம் பிரவுஸ் செய்து கொண்டிருக்கும் போதே மெசேஜ் அனுப்பும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
2. ஷேர் பட்டனை தொடர்ந்து அழுத்தி பிடிப்பதன் மூலம் ஒரு குறிப்பிட்ட பதிவை நம்முடைய நண்பர்களுக்கு எளிதாக அனுப்ப முடியும்.
3. இன்ஸ்டாகிராமில் நண்பர்களுடன் பேச தற்போது யாரெல்லாம் ஆன்லைனில் இருக்கிறார்கள் என்பதை பார்க்கமுடியும். அதன்பின் நாம் யாருடன் சாட் செய்யலாம் என்பதை முடிவு செய்யலாம்
4. 30 நொடிகள் பாடல்களை நண்பர்களுடன் உரையாடலில் ஷேர் செய்ய முடியும்.
5. இரவு நேரங்களில் மற்றவர்களுக்கு மெசேஜ் அனுப்பும் போது உருவாகும் சத்தத்தை குறைக்கும் (silent mode) வசதியை அறிமுகம் செய்துள்ளது.மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க இது உதவும்.
6. நாம் பேச விரும்பும் நபரிடம் லோ-ஃபை( lo-fi) மூலம் தனியாக பேசும் வசதி அறிமுகம் செய்துள்ளது.
7. குரூப் சாட்டில் வாக்கெடுப்பை (poll ) நடத்தும் அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சங்கள் தற்போது இந்தியா உட்பட சில நாடுகளில் மற்றும் அறிமுகம் செய்துள்ளது இன்ஸ்டாகிராம் நிறுவனம்.