விரைவில் “எடிட் அம்சத்தை” அறிமுகம் செய்யும்  ட்விட்டர் நிறுவனம்..

சமூக வலைதளங்களில் அதிக பயனாளர்களை கொண்ட ட்விட்டர் நிறுவனம்,  தற்போது ட்விட்டரில்  தளத்தில் எடிட் அம்சத்தை சேர்க்க போவதாக அறிவித்துள்ளது.கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி எடிட் ஆப்ஷனை சேர்க்க போவதாக  அறிவித்த நிலையில் அதற்கான சோதனை தற்போது  நடைபெற்று வருவதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயனாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை  தற்போது தான் ட்விட்டர் நிறுவனம் நிறைவேற்ற போவதாக தெரிவித்துள்ளது.

இதன்மூலம் ட்விட்டரில்  ஏற்படும் தவறுகள் மற்றும் எழுத்துப் பிழைகளை திருத்தம் செய்திட முடியும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  இந்த அம்சமானது முதலில் ட்விட்டரில் புளூ டிக் கொண்ட பயனாளர்களின் கணக்கில் மட்டும் முதலில் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு ட்விட்டரில் தவறான பதிவை நீக்க மட்டுமே முடியும் என்ற நிலை இருந்தது. இத்தனை வருடங்களில் ஏன் இந்த எடிட்  அம்சம் கொண்டு வரவில்லை என்ற  கேள்விக்கு ட்விட்டரின் இணை நிறுவனர் ஜாக் டோர்சி பேசுகையில் எடிட் அம்சம் கொண்டு வந்தால்  நாம் பதிவிட்ட பதிவு எடிட் செய்யப்பட்டது எனபதை தெரியப்படுத்தவே சிறிது காலம் தேவைப்பட்டது என கூறினார் .

எனவே, பாதுகாப்பான முறையில் எடிட் பட்டனை அறிமுகம் செய்வதில், சிறிது நேரம் எடுக்கும் கொண்டதாக தெரிவித்தார். ட்விட்டரில் தற்போது  எலான் மஸ்க் நடத்திய கருத்துக்கணிப்பில் 90 சதவீதம் பேர் எடிட் அம்சம் வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் எலான் மஸ்க் ட்விட்டரில் நிறுவனத்தின்  பெரும்பான்மை பங்குதாரராக மாறியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…