போலோவின் கடைசி பயணம்.. இந்தியாவில் வோல்க்ஸ்வாகன் போலோ கார் நிறுத்தம்..

2010 ஆம் ஆண்டு சக்கன் நகரில் அமைந்துள்ள தொழிற்சாலையில் முதல் முதலில் தயாரிக்கப்பட்டு விற்பனை வந்த வோல்க்ஸ்வாகன் போலோ என்ற காரின் தயாரிப்பை நிறுத்தப்போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
போலோ காரின் விற்பனை தொடர்ந்து சரிந்துவரும் நிலையில் அதன் தயாரிப்பை நிறுத்தியுள்ளது. அதற்கான அறிவிப்பை தற்போது வோல்க்ஸ்வாகன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் போலோ கார் பேசியிருந்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனையில் அந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அவை பின்வருமாறு: வணக்கம், சாலைகள் அழகாக இருக்கின்றன, ஆனால் அவை எங்கோ முடிகிறது. அதைபோல் 12 வருட முடிவில்லா பயணம் தற்போது பிரேக் அடித்து முடிவுக்கு வந்துவிட்டது. 2010ஆம் ஆண்டு புனேயில் உள்ள சக்கன் ஆலையில் என்னுடைய முகப்பு விளக்கு முதல்முறையாக எப்படி சிமிட்டன என்பது எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது.
அதன்பிறகு ஆட்டோ எக்ஸ்போ 2010 இல், பலரின் கைதட்டல்களுக்கு மத்தியில் இந்தியா என்னை திரும்பி பார்த்தனர். நான் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறேன், பல மக்களை நேசித்தேன், இதுவரை நான் கனவு காணாத பயணங்களுக்கு சென்றுள்ளேன் .
இதற்கு காரணமான, முதல் முறையாக என்னை ஒன்றாக இணைத்த பொறியாளர்கள் முதல் டிரைவர் வரை அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி. சாதாரண ஹேட்ச்பேக்காண என்னை நீங்கள் அனைவரும் மிகவும் விரும்பும் ஹேட்ச்பேக்காக மாற்றியது நீங்கள் தான். என்னிடம் உள்ள வசதிகள் அனைத்தும் எனது SUVW மற்றும் செடான் உடன்பிறப்புகளுக்கு அனுப்புகிறேன். அவர்கள் அதை முன்னெடுத்துச் செல்வார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். சென்று வருகிறேன் நன்றி என கடிதம் முடித்துள்ளது.