தொடர்ந்து ஹேக் செய்யப்படும் அரசு ட்விட்டர் பக்கங்கள்

தற்போதுள்ள நவீன உலகத்தில் அனைத்தும் நவீனமயமாகி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். காய்கறி முதல் காலணி வரை அனைத்தும் வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். இப்படி நாளுக்கு நாள் தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே போனாலும், தொழில்நுட்பத்தை வைத்து திருட்டுகள் செய்வது நடந்து கொண்டேதான் இருக்கிறது. இந்நிலையில் இந்திய பல்கலைக்கழக மானியக் குழுவின் ட்விட்டர் கணக்கு, சிலரால் முடக்கப்பட்டது. இந்த பக்கத்தை இரண்டு லட்சத்து 96 ஆயிரம் பேர் பின் தொடர்கின்றனர். பல்கலைக்கழக மானியக்குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளத்துடன் ட்விட்டர் கணக்கு இணைக்கப்பட்டுள்ளது.

இந்த பக்கம் முடக்கப்பட்ட பின்னர், அதில் அர்த்தமற்ற பதிவுகள், பல்வேறு நபர்களை டேக் செய்து போடப்பட்டு வந்தன. அதன் முகப்பு படத்தில் கார்ட்டூன் படங்கள் வைக்கப்பட்டன. பின்னர் சில மணி நேரத்தில், யுஜிசியின் ட்விட்டர் கணக்கு மீட்கப்பட்டது. முன்னதாக இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் உத்தர பிரதேச முதலமைச்சர் அலுவலகத்தின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டன. இந்த நிலையில், கடந்த மூன்று நாட்களில் மூன்றாவதாக முடக்கப்படும் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு இதுவாகும். சைபர் கிரைம் காவல் துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதே போல கடந்த ஜனவரி மாதம் ஒன்றிய ஒளிபரப்பு துறை அமைச்சாரின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…