இணையத்தில் கசிந்தது சாம்சங் நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன்!!

வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ஸ்மார்ட்போன்களின் வசதிகளும் அதிகரித்துக் கொண்டுதான் வருகிறது. குறிப்பாக 4 ஜி வசதியை தொடர்ந்து தற்போது 5ஜி சேவையும் இந்தியாவில் விரைவில் தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஸ்மார்ட் போன்களில் முன்னணி நிறுவனமாக இருக்கும் சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி M13 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இந்த போன்களில் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், வாட்டர் டிராப் ரக நாட்ச் மற்றும் எல்.இ.டி. ஃபிளாஷ் போன்ற சிறம்பம்சங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி M13 5ஜி தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளது. இந்த போனில் SM-M135M மாடல் நம்பர் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போன்களில் M13 5ஜி 6.5 இன்ச் புல் HD+ டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 6GB, 128GB மெமரி, 5000mAh பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யு.ஐ. வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த போன்களின் விலை விவரம் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *