2வது டோஸ் தடுப்பூசி போடவில்லையா?… சுகாதாரத்துறை அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் மெகா தடுப்பூசி முகாமை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளும்படி சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளை தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக வாரந்தோறும் தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு வீடு தேடி தடுப்பூசி செலுத்தும் திட்டம், தனியார் கல்லூரிகள், நிறுவனங்களில் முகாம்களை அமைத்து தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாட்டில் செப்டம்பர் 12ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வந்த மெகா தடுப்பூசி முகாம், சனிக்கிழமைகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி இன்று 15 மெகா தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது. 50 ஆயிரம் முகாம்களில் 72 லட்சம் தடுப்பூசிகள் தயார் நிலையில் உள்ளன. ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு கூடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாட்டில் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை 82 சதவீதத்தினரும், 2வது டோஸ் தடுப்பூசியை 49 சதவீதத்தினரும் செலுத்தி இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் ஒரு டோஸ் தடுப்பூசி கூட எடுத்துக்கொள்ளவில்லை என்றும், 90 லட்சம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை. எனவே இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இந்த மெகா தடுப்பூசி முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென சுகாதாரத்துறை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *