கரீனா கபூர் மகனின் முழுப்பெயர் என்ன? ம.பி 6-ம்வகுப்பு பொது அறிவு வினாவில் கேள்வி

மத்தியப்பிரதேசத்தில் காந்தவா மாவட்டத்தில் ஒரு தனியார் பள்ளியில் 6-ம்வகுப்பு பொது அறிவு கேள்வித்தாளில் பாலிவுட் நடிகை கரீனா கபூர், சைப் அலிகான் மகனின் முழுப்பெயர் என்ன என்று கேள்வி கேட்கப்பட்டிருந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காந்தவா நகரில் உள்ள அகாடெமிக் ஹைட்ஸ் என்ற பள்ளியில், 6-ம்வகுப்புக்கான தேர்வு நடந்தது. இதில் பொது அறிவு வினாத்தாளில் கரீனா கபூர், சைப் அலிகானின் மகனின் முழுப் பெயரை எழுதுக என்ன என்று கேட்கப்பட்டிருந்தது.இந்த கேள்வித்தாளின் நகல் சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டதைத் தொடர்ந்து வைரலானது. மத்தியப்பிரதேச கல்வித்துறை கடும் விமர்சனத்துக்கும், கேள்விக்குள்ளானது. பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், நெட்டிசன்கள், கடும் கண்டனத்தையும், கேள்வி எடுக்கப்பட்ட விதத்தையும் விமர்சித்தனர்.

பள்ளிநிர்வாக இயக்குநர் ஸ்வேதா ஜெயின் கூறுகையில் “ மாணவர்களின் அறிவுத்திறனை வளர்க்கவே இதுபோன்ற கேள்வி கேட்கப்படுகிறது. கேள்வித்தாளை டெல்லியைச் சேர்ந்த ஒரு அமைப்பு தயார் செய்து அளித்தது.இந்தப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர் இந்த கேள்வித்தாளை எதிர்க்கவில்லை.எந்த மாணவரின் பெற்றோரும் அதிகாரிகளிடம் புகாரும் அளிக்கவில்லை. எந்த மதத்தோடும், சமூகத்தோடும் இணைத்து கேள்வி கேட்டிருந்தால் அது தவறு. இது மாணவர்க்ளின் அறிவை வளர்க்கும் விதத்தில்தான் கேள்வி கேட்கப்பட்டிருந்தது” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *