மாட்டிகிட்டீங்க பங்கு !! பெகாசஸ் விவகாரம் … வெளியானது உண்மை

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனம் பெகாசஸ் மென்பொருளின்  மூலம், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் செல்போன்களை ஒட்டுக்கேட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது .

இந்நிலையில் இந்தியாவிலும் பெகாசஸ் மென்பொருளை பயன்படுத்தி எதிர்க்கட்சி தலைவர்கள், நீதிபதிகள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களின் செல்போன்களை ஒட்டு கேட்கப்பட்டதாக வழக்குகள் எழுந்தன. இதனை ஒன்றிய அரசு மறுத்து வந்த நிலையில், இஸ்ரேலிடம் இருந்து  ஒன்றிய அரசு இந்த மென்பொருளை வாங்கியதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் தற்போது செய்தி வெளியாகி உள்ளது. இது எதிர்க்கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து ஆய்வு செய்த நிபுணர் குழு தெரிவித்ததாவது, இந்தியாவில் பெகாசஸ் மென்பொருள் மூலம் தொலைபேசி ஒட்டுகேட்கப்பட்டது உண்மை என தெரிவித்துள்ளது. மேலும் இதற்கான ஆதாரங்களை உச்சநீதிமன்றத்தில் அமைந்துள்ள விசாரணை குழுவிடம் சைபர் கிரைம் நிபுணர்கள்  அளித்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மனுதாரர்களின்  தொலைபேசிகளை சைபர் கிரைம் ஆய்வுக்கு உட்படுத்தியிருந்தனர். மனுதாரர்களின்  7 ஐபோன்கள், 6 ஆண்ட்ராய்டு போன்களை 2 வெவ்வேறு சைபர் கிரைம் நிபுணர் குழு ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் பொது பெகாசஸ் மென் பொருளை பயன்படுத்தி செல்போன்கள் ஒட்டுகேட்கப்பட்டது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *