இது வளர்ச்சிக்கான பட்ஜெட்… யோகி ஆதித்யநாத் வரவேற்பு..!

இந்தியாவின் 2022- 23 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இந்த பட்ஜெட் முன்னேற்றத்திற்கான பட்ஜெட் என வரவேற்றுள்ளார்.

இந்தியாவிற்கான இந்த பட்ஜெட் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டம் ஆன ஆத்ம நிர்பார் பாரத்தை நிறைவேற்றும் விதமாக அமைந்துள்ளது. மேலும், இந்திய பொருளாதாரத்தை இந்தப் பேராபத்து காலத்தில் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லும் ஒரு முன்னேற்றத்திற்கான பட்ஜெட் இது என தெரிவித்துள்ளார். குறிப்பாக இந்த பட்ஜெட்டின் மூலம் விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் மிகுந்த பயன் அடைவர். இளைஞர்களுக்காக புதிதாக 60 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன. இந்த அறிவிப்பு வேலைவாய்ப்பின்மையை நீக்கி அவர்களின் வாழ்விற்கு வழிகாட்டும் ஒரு சிறப்பான அறிவிப்பாகும்.

மேலும் பேசிய அவர், இந்தப் புதிய பட்ஜெட்டில் கட்டுமான பணிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது என்றார். புதிதாக ரயில்வே சேவைகள்,விமான நிலையங்கள் போன்றவை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தை வலிமைப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *