மக்களே உஷார்… இந்த பொருட்களின் விலை உயரப்போகுது!

மத்திய பட்ஜெட்டின் எதிரொலியாக குடைகள், ஹெட்போன்கள், ஹியர்போன்கள் உள்ளிட்ட பொருட்கள் விலை உயரும். அதேநேரத்தில், பளபளப்பு செய்யப்பட்ட வைரங்கள், மொபைல் போன்களுக்கான கேமரா லென்ஸ்கள் முதலான பொருட்களின் விலை குறை உள்ளது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில்குடைகளுக்கான இறக்குமதி வரி 20% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வெட்டி எடுத்து பளபளப்பாக மாற்றப்படும் வைரங்கள், ரத்தினங்கள் மீதான சுங்க வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மொபைல் போன்களுக்கான கேமரா லென்ஸ்கள் வரி குறைக்கப்பட்டுள்ளது.

விலை குறைய உள்ள பொருட்கள்:

ஆடைகள்,ரத்தினக் கற்கள் மற்றும் வைரங்கள்,செல்லுலார் மொபைல் போன்களுக்கான கேமரா லென்ஸ்,மொபைல் போன் சார்ஜர்கள்,உறைந்த சிப்பிகள்,உறைந்த கடம்பா மீன்கள் ,பெருங்காயம்,கோகோ பீன்ஸ்,மெத்தில் ஆல்கஹால்,அசிட்டிக் அமிலம்,பெட்ரோலியப் பொருட்களுக்குத் தேவையான ரசாயனங்கள்,எஃகு ஸ்கிராப்கள்

விலை உயரவுள்ள பொருட்கள்:

குடைகள்,கவரிங் நகைகள்,ஒலிபெருக்கிகள்,ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்போன்கள்,ஸ்மார்ட் மீட்டர்,சூரிய செல்கள்,எக்ஸ்ரே இயந்திரங்கள்,மின்னணு பொம்மைகளின் பாகங்கள்.

Leave a Reply

Your email address will not be published.

கோவில்களே மசூதிகளாக மாற்றப்பட்டுள்ளது – கர்நாடக பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா குற்றச்சாட்டு

தற்போது இந்தியாவில் மிக பெரிய சர்ச்சையாக போவது மசூதி உள்ள இடத்தில் கோயில்…