இந்தோனேசியாவில் நிலநடுக்கம் !! ரிக்டா் அளவில் 6.2 ஆக பதிவாகியுள்ளது

கிழக்கு இந்தோனேசியாவின் முலுகு மாவட்ட பகுதியில் இன்று அதிகாலை 4.25 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 6.2-ஆகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 2 வீடுகள் இடிந்து விழுந்ததுடன் சில பாதிப்புகளும் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பாதிப்பு குறித்து எந்த அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை.
இதுதொடர்பாக வானிலை காலநிலை மற்றும் புவிஇயற்பியல் வெளியிட்ட தகவலின்படி,மலுகுவில் பராத் தயா மாவட்டத்திலிருந்து வடகிழக்கே 86 கி.மீ தொலைவில் மற்றும் கடலுக்கு அடியில் 131 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என்று கூறப்படுகிறது.இருப்பினும், சுனாமி குறித்த எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.
கடந்த டிசம்பர் மாதம் 30-ந் தேதி இதேபகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்ட்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவானது.கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,30,000 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.