டிராவில் முடிந்த ஆட்டம் கோவா-ஒடிசா இடையிலான போட்டி – பரபரப்பான கட்டத்தில் ஐ.எஸ்.எல்

ISL_NewsLite_Sports

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி சீசன் 8-ன் நேற்றைய ஆட்டத்தில் புள்ளிபட்டியலில் 9-ஆம் இடத்தில் உள்ள  கோவா எப்.சி அணியானது புள்ளிபட்டியலில் 7-ஆம் இடத்தில் உள்ள ஒடிசா எப்.சி யும் மோதினர்.இரு அணிகளும் சம பலத்துடன் விளையாடிய இந்த ஆட்டம் 1 – 1 என்ற கோல் கணக்கில்  டிராவில் முடிவடைந்தது.

இந்த சீசன் தொடக்கம் முதலே சற்று தடுமாற்றத்துடன் விளையாடி வரும் கோவா அணி இதுவரை விளையாடிய 13 ஆட்டங்களில் 3 வெற்றி 5 டிரா மற்றும் 6 தோல்விகளையும் சந்தித்துள்ளது.இந்த சீசன் தொடக்கத்தில் மிக பெரிய அணியாக கருதப்பட்ட ஒடிசா எப்.சியால் எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்கமுடியவில்லை இந்த இதுவரை விளையாடிய 13 ஆட்டங்களில் 5 வெற்றி 2 டிரா மற்றும் 6 தோல்விகளும் சந்தித்துள்ளது.

ஆட்டம் தொடங்கியமுதலே இரு அணிகளும் கோல் அடிக்கும் முயற்சியில் மாறி மாறி வாய்ப்புகளை உருவாக்கி போதிலும்,இரு அணிகளாலும் முதற்பாதியில் கோல் அடிக்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் 61’ நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, ஒடிசா எப்.சி -யின் நட்சத்திர வீரர் ஜோனதஸ் கோல் அடித்தார்.பின்னர் கூடுதல் நேரத்தை பயன்படுத்தி 94 நிமிடத்தில் கோவா அணியில் விளையாடி வரும் தமிழக வீரரான அலெக்சாண்டர் ரோமாரியோ கோல் அடித்தார்.போட்டி நேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் அடிக்க ஆட்டம் சமனில் முடிவடைந்தது.  

Leave a Reply

Your email address will not be published.