நாங்களும் ஓபன் பண்ணுவோம் !! விரைவில் கலைஞர் உணவகம் திறக்கப்படும்

சென்னை மாநகராட்சியின் திட்டமான மலிவு விலை உணவகம் திட்டம் 2013 மார்ச் 19ஆம் நாள் சென்னை-சாந்தோமில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவினால்  தொடங்கப்பட்டது . அதே நாளில் 15 இடங்களில் மலிவு விலை உணவங்கள் செயல்பாட்டிற்கு வந்தன.மலிவு விலை சிற்றுண்டி உணவகம் என்ற பெயரை ‘அம்மா உணவகம்’ என்று மாற்றுவதற்கு சென்னை மாநகராட்சியில் தீர்மானம் 2013 மார்ச் 23ம் தேதியில் நிறைவேற்றப்பட்டது.பொது மக்களிடம் நன்மதிப்பை பெற்று வந்த அம்மா உணவகம் திட்டம் , மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி திட்டமாகவும் இருந்து வருகிறது .

தினந்தோறும் 3 வேளைகளிலும் ஏழை மக்களுக்கு உணவளிக்கும் விதமாக காலையில் இட்லி 1 ரூபாய் , பொங்கல் 5 ரூபாய் மற்றும் மதிய வேளைகளில் கறிவேப்பிலை சாதம் , சாம்பார் சாதம் , தக்காளி சாதம் – 5 ரூபாய் அளவிலும் ,தயிர் சாதம் -3 ரூபாய்-க்கும் , இரவு வேளைகளில் 2 சப்பாத்தி ரூ.3-க்கும் என குறைவான விலையில் வழங்கப்பட்டு வருகிறது . கொரோனா ஊரடங்கு காலத்தில் தமிழகம் முழுவதும் அம்மா உணவகத்தில் மூன்று வேளைகளிலும் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே , தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த போது அதிமுகவின் திட்டமான அம்மா உணவகம் மூடப்படும் என பேச்சுகள் அடிபட்ட நிலையில் , தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இத்திட்டம் தொடர்ந்து அம்மா உணவகம் என்கிற பெயரிலேயே செயல்படும் என தெரிவித்தார் .சென்னையில் வார்டுக்கு 2 வீதம் மொத்தம் 200 வார்டுகளில் 400 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன .இதுதவிர , சென்னையில் மக்கள் அதிகம் வருகை தரும் ராஜீவ் காந்தி , கீழ்ப்பாக்கம் , ராயப்பேட்டை ,ஸ்டான்லி என நகரில் உள்ள 7 அரசு மருத்துவமனைகளிலும் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது .

இந்நிலையில் இனி தமிழ்நாட்டில் ஒருவர் கூட பசியுடன் இருக்க கூடாது என்பதற்காக மாநிலம் மாநிலம் முழுவதும் விரைவில் 500 கலைஞர் உணவகங்கள் திறக்கப்படவுள்ளன என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…