இப்படிலாமா ஆசை இருக்கும்…. காவல்துறை காரை திருடி ஓட்டி ஆசையை தீர்த்த திருடர்

ஆசை இல்லாத மனிதர்களை பார்ப்பது மிகவும் கடினம். குறிப்பாக சொல்ல போனால் மனிதர்களை இயங்குவதே ஆசை என்ற ஒரு சொல் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. சிலருக்கு விமானம் ஓட்டுவதில் ஆசை இருக்கும், சிலருக்கு கார் ஓட்டுவதில் ஆசை இருக்கும், சிலருக்கு நிறைய படிக்க ஆசை இருக்கும், இன்னும் சிலருக்கு எந்த வேலையும் செய்யாமல் சும்மா இருப்பதே ஆசையாக இருக்கும். இப்படிப்பட்ட ஆசையை நிறைவேற்றி கொள்ள தான் மனிதர்கள் தங்கள் வாழ்வை வாழ்கிறார்கள்.

இந்நிலையில் கர்நாடகா மாநிலம் அன்னிகேரி நகரைச் சேர்ந்த நாகப்பா ஹடபட் (45) என்ற நபர், காவல்துறை காரை திருடி 112 கி.மீ தூரம் வரை பயணித்துள்ளார்.இவர்  பிரபல இ- காமர்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றியவர். இவருக்கு காவல்துறை காரை ஓட்ட வேண்டும் என்று ரொம்ப ஆசை. அந்த ஆசையை நிறைவேற்றி கொள்ள நேற்று அதிகாலை 3.30 மணியளவில் அன்னிகேரி காவல் நிலையத்திற்கு வெளியே போலீஸ் ஜீப் நின்று கொண்டிருந்ததை ஹடபட் கண்டார். பணியில் இருந்த இரண்டு போலீசார் ஸ்டேஷனுக்குள் இருந்ததால், சாவியை ஜீப்பில் வைத்துவிட்டு சென்றுள்ளனர்.அந்த நேரத்தில் நாகப்பா அந்த ஜீப்பை திருடி ஓட்டி சென்றுள்ளார்.

இதுகுறித்து அன்னிகேரி காவல் நிலைய ஆய்வாளர் எல்.கே.ஜூலாகட்டி கூறுகையில், வாகனம் ஆட்கள் இல்லாமல் இருந்ததால், நாகப்பா அவரது ஆசையை  நிறைவேற்றி கொள்ள  வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில், “நாகப்பா இரவு முழுவதும் ஜீப்பை ஓட்டிக்கொண்டு, அன்னிகேரி நகரத்திலிருந்து 112 கிமீ தொலைவில் உள்ள மோட்பென்னூர் ஹாவேரி மாவட்டத்தை அடைந்துள்ளார். நீண்ட தூரம் சென்ற பின், வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு, வாகனத்திற்குள்வே  தூங்கியுள்ளார். சாலையோரம் போலீஸ் வாகனம் நிறுத்தப்பட்டிருப்பதைக் கவனித்த சில குடியிருப்பாளர்கள் ஹடபட் உள்ளே தூங்குவதைக் கண்டனர்.ஹடபட்  டிரைவர் போலீஸ் போல் இல்லாததால், அவர்கள் தார்வாட் போலீசாரை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்

உள்ளூர் போலீஸ் குழு அந்த இடத்திற்கு வந்து, அந்த நபரை தடுத்து நிறுத்தி, போலீஸ் வாகனத்தை காவலில் எடுத்தது. பின்னர் வாகனத்தை அன்னிகேரி போலீசில் ஒப்படைத்தனர்.” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….