புதிய இந்தியாவை உருவாக்க புதிய உத்தரபிரதேசம் தேவை…பாதுகாப்பு அமைச்சர் பேச்சு..!

ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புதிய இந்தியாவை உருவாக்க புதிய உத்தரப்பிரதேசம் தேவை என பேசியுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இவ்வாறு பேசியுள்ளார். புதிய இந்தியாவை உருவாக்க உங்களது வாக்குகளை பாஜகவிற்கு செலுத்துங்கள் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஷாஜகான்பூர் தொகுதியில் பொதுக்கூட்டம் ஒன்றில் இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் உத்தரப் பிரதேச மக்கள் தங்களது வாக்குகளை பாஜகவுக்கு ஆதரவாக செலுத்துமாறு கேட்டுக்கொண்டார். இந்தத் தேர்தல் புதிய உத்தர பிரதேசத்தை உருவாக்கும் தேர்தல் என அவர் தெரிவித்தார்.

சர்வதேச அளவில் இந்தியாவின் பெருமையை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைநிமிரச் செய்துள்ளார். அவரது ஆட்சியில் இந்திய அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என அவர் தெரிவித்தார். முந்தைய அரசுடன் பாஜகவினை ஒப்பிட்டு உத்தரபிரதேச வளர்ச்சிக்காக பாஜக பாடுபட்டது குறித்து பேசினார். முந்தைய அரசுகள் அவர்களது நலனுக்காகவே செயல்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

உத்தரப்பிரதேச தேர்தலுக்கு இன்னும் சில தினங்களில் உள்ள நிலையில் அங்கு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 10 ஆம் தேதி தேர்தல் தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் முடிவுகள் வருகிற மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….