ஒரு முதல்வர் இப்படி அறைய சொல்லலாமா..?

இந்த ஆண்டு உத்திரபிரதேசம் உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் உத்தர பிரதேச தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஏற்பட்ட அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கொரோனா தடுப்பு ஊசி குறித்து வதந்தி பரப்பியவர்கள் கண்ணத்தில் உங்களது ஓட்டுகளால் பளாரென்று அறையுங்கள் என பேசியுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் பேரணி ஒன்றில் கலந்து கொண்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், சமாஜ்வாதி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் உத்தரப் பிரதேச மக்கள் இருளில் மூழ்கி இருந்ததாக அவர் குற்றம் சாட்டினார். ஆனால், பாஜகவின் ஆட்சியில் மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

கொரோனா தடுப்பூசி குறித்து எதிர்க்கட்சிகள் வதந்திகளை கிளப்பி வந்தன. ஆனால், இன்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் பலருக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு உள்ளது. எதிர்க்கட்சிகள் கொரோனா தடுப்பூசியை மோடி தடுப்பூசி என ஏளனம் செய்தனர். அவர்களுக்கு 100% தடுப்பு ஊசி செலுத்தி இந்த சட்டப் பேரவைத் தேர்தலில் உங்களது வாக்குகளால் அவர்களது கண்ணத்தில் பளாரென்று அறைய வேண்டும் என பேசினார்.

மாநிலத்தில் வருகிற பிப்ரவரி 10 முதல் தொடங்கி ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான தேர்தல் முடிவுகள் வருகிற மார்ச் 10 அன்று வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.