மனைவிக்கு நடந்த கொடூரம்..! சாமியாரும் கணவரும் செய்த சம்பவம்..! அடேங்கப்பா..?

உலகிலே தெற்காசிய நாடுகளில்  தான் அதிக மூட நம்பிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.குறிப்பாக பாகிஸ்தான், இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகள் தான் மூடநம்பிக்கையால் அதிகம் மூழ்கியுள்ளது. நடைபெற வாய்பே இல்லாத ஒன்றை கண் மூடித்தனமாக நம்புவது தான் மூட நம்பிக்கை எனப்படும் . அடிப்படை அறிவியல் உண்மைகளுக்கு எதிரான அனைத்துமே மூட நம்பிக்கைகள் தான்.ஆனால் மனநோய்களின் அறி குறிகளில் ஒன்றான மனப் பிறழ்வு (Delusion) என்பது, நடைபெற வாய்ப்பற்ற ஒன்று அதிநிச்சயமாக நடந்துகொண்டி ருப்பதாக அல்லது எதிர்காலத்தில் நடைபெறும் என்று கண்மூடித்தனமான நம்பிக்கையை கொண்டிருப்பது.

இது போன்ற மூட நம்பிக்கைகளால், மனிதர்களில் சிலர் தங்களை தாங்களே அழித்து கொண்டும் உள்ளனர். காலச்சக்கரத்தால்  மூடநம்பிக்கைகள் குறைந்தாலும், உலகின் எங்கோ ஒரு மூலையில் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தானில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என சாமியாரிடம் சென்ற கர்ப்பிணியின் தலையில் ஆணி அடித்து உள்ளது ஒரு கும்பல். 3 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த நிலையில், 4வது ஆண் குழந்தை பெற்று கொடுக்க வேண்டும் என கணவர் வலியுறுத்தியதால் இந்த விபரீதம் நடந்துள்ளது. ஆணி மண்டைக்குள் இறங்கியதால் அவரை உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்செய்தி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுகுறித்து அந்த பெண் தெரிவித்தது, “எனக்கு இதுவரை 3 குழந்தைகள் பிறந்துள்ளது. அடுத்து பிறக்க போகும் குழந்தை ஒருவேளை பெண்ணாக இருந்தால் என் கணவர் என்னை விவாகரத்து செய்துவிடுவேன் என்று என்னை மிரட்டினார். அதனால்  தான் இச்செயலுக்கு நான் ஒப்புக்கொண்டேன்.” என்று கூறினார். 

Leave a Reply

Your email address will not be published.