அரை மணி நேரம் ஓட்டுநரை வெளுத்து வாங்கிய அடாவடி பெண்… அதிர்ச்சி வீடியோ!

ராங் ரூட்டில் வந்த ஸ்கூட்டி மீது அரசு பேருந்து லேசாக மோதியதால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், ஓட்டுநரை சரமாரியாக தாக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆந்திர மாநிலத்தில் பென்ஸ் சர்க்கிள் பகுதியில் இருந்து விஜயவாடா நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று, ஒருவழிப்பாதையில் போய்க்கொண்டிருந்த போது எதிரே ராங் ரூட்டில் வந்த பெண்ணின் ஸ்கூட்டி மீது லேசாக உரசி, சிறிய அளவிலான விபத்து நிகழ்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், பேருந்துக்குள் ஏறி ஓட்டுநர் மீது சுமார் அரை மணி நேரம் சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளார்.
பேருந்தில் இருந்த பயணிகள், நடத்துநர் என அனைவர் சொல்லியும் அடிப்பதை நிறுத்ததாத அந்த பெண் ஓட்டுநரை தகாத வார்த்தையில் திட்டியும், சட்டையை பிடித்து இழுத்து அடித்தும் ரகளையில் ஈடுபட்டார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த பிறகும் குரலை உயர்த்துவதை குறைக்காமல் கத்திக்கொண்டிருந்தவரை போலீசார் சமாதானம் செய்து அழைத்துச்சென்றனர். ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில் தற்போது அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராங் ரூட்டில் வந்ததோடு, ஓட்டுநர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை குவித்து வருகிறது.