திடீர் மரணம்… பஜாஜ் குழுமத் தலைவர் “ராகுல் பஜாஜ்” காலமானார்!

பஜாஜ் குழுமத்தின் முன்னாள் தலைவரும், நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவருமான ராகுல் பஜாஜ் இன்று காலமானார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள அவரது இல்லத்தில் அவர் உயர் பிரிந்ததாக பஜாஜ் குழுமம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ராகுல் பஜாஜ் 1938 ஜூன் 30 ஆம் தேதி கொல்கத்தாவில் பிறந்தார். அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் பட்டம் பெற்றவர். 40 ஆண்டுகளுக்கும் மேலாக பஜாஜ் குழுமத்தின் தலைவராக இருந்தார். கடந்த ஆண்டு ஏப்ரலில் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததையடுத்து அவர் ‘எமரிட்டஸ் தலைவராக’ நியமிக்கப்பட்டார். 2001 இல் அவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அவர் மாநிலங்களைவை உறுப்பினராகவும் இருந்திருக்கிறார்.

83 வயதான ராகுல் பஜாஜ் நாட்டின் மிக உயரிய விருதான பத்ம பூஷண் விருதை வென்றுள்ளார். இவருக்கு ராஜீவ் பஜாஜ், சஞ்சீவ் பஜாஜ் என இரு மகன்களும், சுனைனா என்ற மகளும் உள்ளனர்.உடல் நலனைக் காரணம் காட்டி பஜாஜ் குழுமத் தலைவர் பதவியிலிருந்து ராகுல் பஜாஜ் கடந்தாண்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published.